இரு வேறுலகம் புதியகவிதை மீதான விமர்சனம்.
கவிஞர் செல்லா யாரும் செல்லாப் பகுதிக்குச் சென்று சொல்லாப் பொருளைச் சொல்ல முனைந்துள்ளார். சரியலிசப் பார்வையில் தன் மனதை விடுதலை செய்து சமூக அவலத்தைச் சுட்டுகிறார்.
பொதுவாக புரிந்து விடாமல் வாசிப்பவரின் அனுபவங்களைக் கொண்ட இருண்மை நிலையில் தான் கண்ட இருவேறு உலகத்தின் இருத்தலை நம் சிந்தையில் உலவ விட்டிருக்கிறார்.
இருதரப்பு உணர்ச்சிகளின் குவியலை அடுக்கி, அதை எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்ளும் நிலையில் வாசகர்கள் உள்ளார்கள் என்கிற கவலையை நினைவூட்டுகிறார்.
காதல் - காமம் இவற்றின் இருத்தல் வசதி படைத்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் வசதியற்ற உலகத்திற்கு ஒரு மாதிரியாகவும் அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
காதல் பொதுவானது; காமம் பொதுவானதல்ல. அது மேல் வர்க்கத்திற்கு அடிக்கடி நிகழும் கொண்டாட்டமாகவும், கீழ் வர்க்கத்திற்கோ அரிதாகிப்போன திண்டாட்டமாக மாறி இருப்பதை எப்படி வாழும் இடம் தீர்மானிக்கிறது என்பதை இவரின் கவிதை வரிகள் விமர்சித்து வாசகரின் முகத்தில் வீசி எறிகிறது.
காதலாவது.... கத்தரிக்காயாவது... இக்கவிதையின் இந்த இறுதி வரி
காதல் எனும் வாழ்க்கை.... கத்தரிக்காய் எனும் காமம் என்று புரிந்துகொள்ளச் செய்துவிட்டது.
-----
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன்
முதன்மை ஆசிரியர்
தமிழறிவு மின்னிதழ்
9025988791.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக