ஹைக்கூ திலகம்.
கவிஞர் இரா. இரவி
86, வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதி,
வடக்குமாசி வீதி,
மதுரை - 625001.
அலைபேசி: 9842193103
eraeravik@gmail.com
தலைப்பு: கீழடி
மனிதர்களின் முதலடி
தமிழ்த்தாயின் மடி
கீழடி!
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு
முந்தியது
கீழடி!
எழுத்தறிவோடு வாழ்ந்தனர்
எல்லோரும் அறிந்திருந்தனர்
கீழடி!
தோண்டத் தோண்ட
தோன்றின பொருட்கள்
கீழடி!
தொழில்நுட்ப அறிவோடு
தொன்றுதொட்டு வாழ்ந்தனர்
கீழடி!
உலகின் ஆசான்
உதித்தது
கீழடி!
உலகிற்கு மேலடி
உண்மையில் முதலடி
கீழடி!
மதுரையின் பெருமைகளில்
ஒன்றைக் கூட்டியது
கீழடி!
கண்காட்சியில் கண்டு
கண்கள் விரிந்தன
கீழடி!
ஆறாயிரம் ஆண்டுகள்
வரலாறு புதைந்துள்ளது
கீழடி!
ஆச்சரியம் அதிசயம்
உண்மையில் அற்புதம்
கீழடி!
எழுத்தறிவித்தனர்
எல்லாம் வைத்திருந்தனர்
கீழடி!
சுடுமண் கலை
சொல்லித் தந்தவர்கள்
கீழடி!
முந்தைய நாகரிகம்
முன்னேற்ற நாகரிகம்
கீழடி!
இந்தப் பொருட்கள் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா
கீழடி!
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
கீழடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக