அக்டோபர் 01, 2021

அரசஞ்சண்முகனாரின் பிறந்தநாள்விழா கருத்தரங்கு

அரசஞ்சண்முகனாரின் பிறந்தநாள்விழா கருத்தரங்கு
மதுரை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி மற்றும் திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறையும்  இணைந்து இலக்கணக்கடல்  சோழவந்தான் அரசஞ் சண்முகனாரின் 153ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பன்னாட்டுக் கருத்தரங்கு நான்காம் தமிழ்ச்சங்கத்தில்  15செப்டம்பர் 2021 அன்று  வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் செந்தமிழ்க்கல்லூரி  முதல்வர் கி.வேணுகா  அவர்கள் தலைமை வகித்தார்.  கல்லூரித் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் அவர்கள் அரசஞ்சண்முகனாரின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் மதுரை சேதுபதி பள்ளியில் மகாகவி பாரதியாருக்கு முன்பு அங்கு அரசஞ்சண்முகனார் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார். செந்தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் மா.செல்வத்தரசி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முனைவர் ஜெ.கோகிலா அவர்கள் வரவேற்புரை கூறினார். சோழவந்தான் அரசஞ் சண்முகனார் என்ற நூலின் ஆசிரியரும் செந்தமிழ்க் கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் மலர்விழி அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் புலவர் சு.முத்தையா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  அரசஞ்சண்முகனாரின்  நண்பரான மறைமலை அடிகளார்  நினைவு நாளும் செப்டம்பர் 15 என்பதால்  மாணவர் அழகுவேல் மறைமலைஅடிகளாரின் பணி குறித்து சில மணித்துளிகள். உரையாற்றினார் மாணவர் முனிச்செல்வம் குழுவினர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விவேகானந்த கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் கோ.பாலமுருகன் அவர்களும் செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியர்களும் தமிழார்வலர்களும் மாணவர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக