கொடியடுப்பு நூல் வெளியீட்டுவிழா
18.12.2021 அன்று சோழவந்தானூர் முத்தையாப் புலவன் எழுதி பொன்விழா கண்ட வசந்தா பதிப்பகம் (சென்னை-88) பதிப்பித்த கொடியடுப்பு என்னும் புதுக்கவிதை நூல் கூடல் 22ஆம் ஆண்டுத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக மதுரை வி.ஆர்.கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் வெளியிடப்பட்டது. முனைவர் வ.க.இராமகிருஷ்ணன் (தமிழ்த்துறைத் தலைவர்,விவேகானந்த கல்லூரி, மதுரை-625235)அவர்கள் நூலை வெளியிட எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார். மதுரைசெல்லூர்உபாத்தியாயர் முனைவர் ச.தமிழரசன் அவர்கள் நூல்குறித்துக் கருத்துரை வழங்கினார். தமிழாசிரியை பூ.மகாலக்ஷ்மி அவர்கள் (ப.நி) வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் வித்யாபதி அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அழகு அண்ணாவி அவர்கள் மற்றும் கூடல் அமைப்பினர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். விதிமுறைகளைப் பின்பற்றி கலைஞர்கள் கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக