புதுக்கவிதை
தொட்டு விடும் தூரத்தில் வெற்றி...
காணும் சில முகங்களில் கூட
கண்ணுக்கு
எட்டாத ஏதோவொரு
கபடம் மறைந்து
விளையாடுகிறது...
வஞ்சத்தை
ஒளித்து வைத்து
வார்த்தைகளில்
தேன் கலப்பது - என்
வலிமையைச்
சோதிக்கவே...
என்னை வீழ்த்த
ஓடோடி
வருகின்றன
இத்தனை தடைகள்!
வழியெங்கும்
முட்கள் தைத்த
வலி நிறைந்த
வாழ்க்கையை
வாழ்ந்துதான்
காட்டுவேன்...
இன்னல்கள் பல
நேரினும்
இனியும்
தாமதிக்காது
இன்முகத்துடன்
ஏற்றுக்கொள்வேன்...
தொட்டுவிடும்
தொலைவில் - வெற்றி
தேவதை
காத்துக்கொண்டிருப்பது
எனக்கு வாகை
சூடவே!
ஹரிஷிகேஷ், ஈரோடு.
இ/பெ. ஐஸ்வர்யா
ரவீந்திரன்,
த/பெ.
தி.ரா.ரவீந்திரன்,
104, ஸ்ரீ ஹரி ஹோம்ஸ்,
ஆண்டவர் 2-வது வீதி,
ஈரோடு - 638011.
Phone:
7010348277
Email ID: hrishibusiness@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக