இளையோர் மனநலம்
-பாரத்
வித்தியாச குணங்கள் கொண்ட மனங்கள்...
வித விதமான கனவுகள் கொண்ட விழிகள்...
தன் உணர்வுகளையும், கனவுகளையும் கைபேசியில் தேடி அலையும் எந்திர மனிதரடா...!
உறக்கங்கள் மறந்து...
உணர்வுகள் துறந்து...
அலைந்திடும் ஊடகப் பித்தகர்கள் நாங்கள்.
அரசியல் பேசுவர் சிலர்...
சிந்தனையாளர்கள் பலர்...
சுமைகள் ஆயிரம் என்றாலும் சிரித்திடும் சித்திரங்கள் நாம்...
சமூக வளைதளங்கள் வாழ்க்கையாய்...
தின்பதற்கு உணவில்லை எனினும் டிக் டாக் உடன் உறங்கிடுவோம்...!
கட்டு கட்டாய் கொட்டி வாங்கிய கல்வி பலனற்று போக...
பாமரரின் சம்பாத்தியம் பார்த்து விசனப்படும் அப்பாவிகள் நாங்கள்...!
உறங்காமல் அலைந்திடும் ஊடகங்கள்...!
உறங்கவிடாமல் செய்திடும் செயலிகள்...!
இதுபோதது உணர்ச்சிப் போராட்டங்கள் வேறு...
இதில் கனவுகள் தொலைந்த இடம் எங்கே...?
செய்வதறியாது திகைத்து நிற்கும் சிறுவர்கள் நாங்கள்...!
தெளிந்திடுவோம்...
நிமிர்ந்திடுவோம் இந்நிலையற்ற உலகில்...
சிறிது சிந்தித்தால்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக