மார்ச் 24, 2025

பெரிய அருவி நீர்த்தேக்கம் மலை வலம் காணல் - பயண அனுபவம்

*கேசம்பட்டி மலை வலம் காணல்*

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கேசம்பட்டி பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை  மலை வளம் காணச் சென்றேன். இப்பயணம் மனதிற்குப் பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது.


"ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?" - பழமொழி. காணுமிடம் எல்லாம் ஆவாரைச் செடியின் பொன் மலர்கள் பூத்துக் குலுங்கி வரவேற்றன.



நாள்: 23.03.2025
https://goo.gl/maps/AyxDk3VySvDRkzsT8


நவம்பர் 24, 2024

பராரி - திரைப்பட விமர்சனம்

பராரி

இந்தப் படத்தை எடுத்ததற்காக ராஜீ முருகனைக் கட்டி அணைத்து முத்தமிடத் தோன்றுகிறது. வாழ்க நீர் எம்மான் செவ்வணக்கம் என் தோழரே! 
நேரில் சந்திக்கும் போது இப்படி ஒரு படம் தந்தமைக்காகக் காலில் கூட விழுவேன். (வசனங்களுக்காக)
ஒரு சமூகத்தின் அறிவுக் கண்ணைத் திறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் செய்து இருக்கிறார் என் அன்புத் தோழர் ராஜு முருகன். 
ஏற்கனவே joker வேற லெவல்!
PARARI அதைவிட வேற லெவல்.

ஜோக்கர்+ பரியேறும் பெருமாள்+ நெஞ்சுக்கு நீதி+ அசுரன்+ விடுதலை + வாழை+ மாமன்னன்+ ரயில்+கூழாங்கல்+ நந்தன் = பாராரி  என்று வைத்துக் கொள்ளலாம். (இது என் கருத்து மட்டுமே. )

காதலர்களை அம்மணமாக்கிப் பார்க்கும் இந்தச் சாதியக் கொடூர சமூகத்தை சுட்டிக்காட்டி, உண்மையில் எதை அம்மணம் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று நெத்திப் பொட்டில் அடித்தது போல கதை சொல்லியிருக்கிறார்.

இந்தச் சமூகச் சூழலுக்குப் பயந்து போடப்படும் வாசகம். " இப்படத்தில் வரும் சம்பவங்கள் காட்சிகள் யாரையும் குறிப்பன அல்ல" என்று. ஆனால் உண்மையில் " இப்படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகள். 

பாராரிகளாய் ஆக்கப் பட்ட ஒவ்வொரு  குடிமகனும் பார்க்க வேண்டிய படம். மன்னிக்கவும் பாடம். 600 பக்க நாவலை 3மணி நேரப் படமக்கியது போல இருந்தது. தொடங்கியதில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பு. Climax வசனங்கள் தமிழ் முற்போக்குச் சினிமாவின்  உச்சம்!

ஆகஸ்ட் 08, 2024

138 வருடங்கள் கடந்த மாமதுரைச் சின்னம்.

#மாமதுரைப் போற்றுதும்!
#மாமதுரைப் போற்றுதும்!

138 வருடங்கள் கடந்த பின்னும் இன்றும் கம்பீரமாய் நிற்கும் #மதுரை ஏவி பாலத்தில் ஒரு மாலை நேர உலா.

#கோரிப்பாளையம்  முதல் யானைக்கல் வரை மதுரையின் வடகரையையும் தென்கரையையும் இணைக்கும் நூற்றாண்டு கண்ட பாலம்.

"1857 போருக்குப் பிறகு #பிரிட்டிஷ் ஆட்சியர் #ஆல்பர்ட் விக்டரால் இந்தப் பாலம் மதுரையில் கட்டப்பட்டது, அப்போது அவர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பிரிட்டிஷ் குடியேற்றங்களை எதிர்காலத்தில் கலகங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பிற்காக வடக்குக் கரைக்கு மாற்ற முடிவு செய்தனர்.  16 வளைவு தூண் பாலத்தின் கட்டுமானம் 1884 இல் தொடங்கியது மற்றும் பாலம் டிசம்பர் 8, 1886 இல் திறக்கப்பட்டது."
(தகவல்: Vivanesh Parthiban | TNN | Dec 9, 2022, 08:42 IST, டைம்ஸ் ஆப் இந்தியா)

சில சுவாரசியங்கள்: 

#இந்தப் பாலம் திறக்கப்படும் பொழுது மகாகவி பாரதியாருக்கு வயது 4.

#மதுரை அமெரிக்கன் கல்லூரி திறக்கப்பட்டு 5 ஆண்டுகள்.

#பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மதுரைக்கு வந்து 85 ஆண்டுகள் ஆகியிருந்தன.

#பிரிட்டிஷ் லெப்டிநென்ட் பி.எஸ். வார்டு அவர்கள்  கொடைக்கானலைக் கண்டறிந்து 65 வருடங்கள் ஆகியிருந்தன.

கீழ்க்காணும் பாலத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள பெயர். இப்பாலத்தைக் கட்டிய இந்திய வைஸ்ராய்.

Lord Dufferin (1826–1902) was the Governor-General and Viceroy of India (1884-1888).

இப்படிக்கு,
மதுரை செல்லூர் உபாத்தியாயர் டாக்டர் ச.தமிழரசன்.
நாள்: 08.08.2024
நேரம்: மாலை 6 மணி
இடம்: மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் அடியில் உள்ள சாலை.

#மதுரை 
#madurai360 
#மாமதுரை
#tamilnadutourism

ஜூன் 22, 2024

அருப்புக்கோட்டையில் 1000 ஆண்டுக்கு முற்பட்ட கோவில் - கள ஆய்வுப் பயணம்.

அருப்புக்கோட்டையில் 1000 ஆண்டுக்கு முற்பட்ட கோவில் - கள ஆய்வுப் பயணம்.

கி.பி.1168 ஆண்டு உருவாக்கப்பட்ட வாழவந்தம்மன், திருக்கோவில், அருப்புக்கோட்டை கள ஆய்வுப் பயணம் இன்று வந்துள்ளேன். 
நாள்: 22.06.2024 சனிக்கிழமை.

22.11.1938 இல் இந்தக் கோவிலுக்கு எலக்ட்ரிக் லைட் வசதி கிடைத்துள்ளது பற்றி ஒரு முகப்புக் கல்வெட்டு உள்ளது.


கோவிலில் எடுக்கப்பட்ட படங்கள்:
கோவில் சுவரில் உள்ள சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டு.
சிறுதெய்வக் கோவில்கள்
இராக்காயி 
இருளப்பன்

இக்கோவிலின் வரலாறு பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைக் காணவும்.
https://shorturl.at/GU9Hg