நிலவெனும் தூதுவன் - புதுக்கவிதை.
நீல வான வீதியில்
மிதந்து செல்லும் வெண்ணிலவே… நீ
கடந்து செல்லும் பாதையில் …
கன்னி என் தேவியின்
காதல் ஓசை கேட்குதா…?
மேகத்தைத் தூது விட்ட
மேதைகளின் பாதையில்
தூது நானும் தொடுத்தேனே…!
விழிக்குள் ஒளியாய்
இதயத்ததுள் துடிப்பாய்
இருந்த நீஏன் தூரமானாய்..!
என்னில் நீயும்
உன்னில் நானும்
செம்மண்ணில் மழையாய்…
கலந்தது பொய்யோ…?
காதல் கனவே!
கனியின் ரசமே!
காலம் கணித்து
கரங்கள் கோர்த்து
பந்தம் உணரும்
தருணத்தில்
பூமி யாவுமே
வாழ்த்தி பாடுமே!
நீல வான வீதியில்
மிதந்து செல்லும் வெண்ணிலவே…
விரைந்து சென்றே சொல்லாயோ?
விருப்பம் கூறி வாராயோ..!
கவிஞர்:
முனைவர் மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக