பிரிதொரு சொல் - புதுக்கவிதை
வார்த்தைகள் அற்ற
பேச்சுக்களால்
நிலைத் தடுமாறுகிறது மனம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
தன் வாக்கில்
பிரிந்து சென்று
சேர இயலாத வண்ணம்
குழம்பிப் போய் நிற்கிறது
கூடுவதற்கு முயற்சி செய்வதில்
பிரயோசனம் இல்லை
என்றாலும் கூட
எழுத்துக்கள் சேர முயற்சிக்காமலில்லை
வார்த்தை சாலங்களால்
சிக்கலின்றி முடித்து வைக்க
முயற்சி செய்கிறது சொல்
அதேபோல்
எல்லா சொற்களும்
அர்த்தங்களாக மாற வேண்டும்
என்கிற அவசியமில்லைதானே
ஆனால்
உந்தியிலிலிருந்து
எழும் ஓசைகள்
சொற்களாக நின்று
எதிரில் உள்ளவர்களுக்கு
குழப்பம் தராமல்
இருக்க வேண்டுமே
சிக்கலால் எழும் வார்த்தைகள்
சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால்
அதற்கெல்லாம்
நான் பொறுப்பல்ல என்று
எப்படியோ தப்பித்துக் கொள்கிறது
ஆசை மனம்
அன்புவேல் வர்மன்
முத்தாக்கவுண்டனூர்
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்
சேலம் மாவட்டம் 636119.
9600413310
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக