அக்டோபர் 25, 2026

மழையோடு வரவேற்றது திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி

#மழையோடு_வரவேற்றது_திண்டுக்கல்__புத்தகக்_கண்காட்சி.


நேற்று 24.10.2026 திண்டுக்கல் புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். நுழைவாயிலை அடியும் முன் தூரல் தொடங்கி இருந்தது. வாசலை அடைந்ததும் செருப்பு பிஞ்சு விட்டது. காலில்தான். மாலை 5மணி இருக்கும். 8 மணிவரை தொடர் மழை. மூன்று மணிநேரம் புத்தக அரங்குகளில் செலவிட்டேன். ஒரு சில நூல்கள் வாங்கினேன். நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. என்னைப் போலவே வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த கவிஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. நானும் கொடைக்கானல் பண்பலையில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டேன். அடை மழையில் ஏதாவது சூடாகச் சாப்பிடலாம் என்று தோன்றவே, பானிபூரி, மசால்பூரி, காளான் வைத்திருந்தார்கள். விலை 60 ரூபாய் சொன்னார்கள். ஒன்றை வாங்கிச் சாப்பிட்டு மீண்டும் உள்ளே சென்றேன். புத்தக அரங்குகள் மழைநீரால் சூழப்பட்டு இருந்தன. நடக்கச் சிரமமாக இருந்தது. குறிப்பாக கௌரா பதிப்பகதின் முன் மிக அதிக அளவில் தண்ணீர் தேங்கி வாசகர்களுக்குச் சிரமம் தந்தது. அக்கடைக்கு எதிரில் இலவசக் கட்டப்பை தந்தார்கள். வாங்கிவிட்டு வெளியே வந்தேன். சற்றே மழை நிற்கத் தொடங்கி இருந்தது அங்கே வெளியில் ISRO மைய வாகனத்துக்கு அருகில் ஒரு அன்பர் மஞ்சப்பை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தார். அதையும் வாங்கிக்கொண்டு மதுரைக்கு கிளம்பினேன். மழையின் ஈரம் உலராமல் வெதுவெதுப்பாக வீடு வந்து சேர்ந்தேன். 

புத்தகங்களைக் காப்பாற்றப் பட்ட பாடு அப்பப்பா....

இப்படிக்கு,
முனைவர் ச.தமிழரசன்,
முதன்மை ஆசிரியர்,
தமிழறிவு பன்னாட்டு மின்னிதழ்,
9025988791.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக