புதுக்கவிதை..
தலைப்பு : குப்பை
குப்பைக்கும்
அதை அள்ளுவோர்க்கும்
ஒரே வண்டியா?
அனைத்துச் சாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம்
சரிதான்
அனைத்துச் சாதியினரும்
தூய்மைப் பணியாளர்
ஆவது எப்போது?
உண்மையில்
யார் குப்பைக்காரர்
போடுபவரா
அள்ளுபவரா?
By,
Tamilarivu Bharathi,
Madurai.
smiletamil@gmail.com
12.02.2026.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக