பராரி
இந்தப் படத்தை எடுத்ததற்காக ராஜீ முருகனைக் கட்டி அணைத்து முத்தமிடத் தோன்றுகிறது. வாழ்க நீர் எம்மான் செவ்வணக்கம் என் தோழரே!
நேரில் சந்திக்கும் போது இப்படி ஒரு படம் தந்தமைக்காகக் காலில் கூட விழுவேன். (வசனங்களுக்காக)
ஒரு சமூகத்தின் அறிவுக் கண்ணைத் திறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் செய்து இருக்கிறார் என் அன்புத் தோழர் ராஜு முருகன்.
ஏற்கனவே joker வேற லெவல்!
PARARI அதைவிட வேற லெவல்.
ஜோக்கர்+ பரியேறும் பெருமாள்+ நெஞ்சுக்கு நீதி+ அசுரன்+ விடுதலை + வாழை+ மாமன்னன்+ ரயில்+கூழாங்கல்+ நந்தன் = பாராரி என்று வைத்துக் கொள்ளலாம். (இது என் கருத்து மட்டுமே. )
காதலர்களை அம்மணமாக்கிப் பார்க்கும் இந்தச் சாதியக் கொடூர சமூகத்தை சுட்டிக்காட்டி, உண்மையில் எதை அம்மணம் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று நெத்திப் பொட்டில் அடித்தது போல கதை சொல்லியிருக்கிறார்.
இந்தச் சமூகச் சூழலுக்குப் பயந்து போடப்படும் வாசகம். " இப்படத்தில் வரும் சம்பவங்கள் காட்சிகள் யாரையும் குறிப்பன அல்ல" என்று. ஆனால் உண்மையில் " இப்படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகள்.
பாராரிகளாய் ஆக்கப் பட்ட ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம். மன்னிக்கவும் பாடம். 600 பக்க நாவலை 3மணி நேரப் படமக்கியது போல இருந்தது. தொடங்கியதில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பு. Climax வசனங்கள் தமிழ் முற்போக்குச் சினிமாவின் உச்சம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக