ஏப்ரல் 18, 2024

கருப்பு வைரம் - புதுக்கவிதை

கருப்பு வைரம்
******************************************

இளஞ்சூட்டு கரிசல் மண்ணில்
பருத்தி வெடித்துச் சிரித்தபோது
கரிசல் காடெங்கும் வெண்ணலை...

பச்சிலை போர்த்திக் கொண்டு
பாசிப்பயறு அலைகிறது
காடுகளில்....

கொடிபிடித்து நடக்கும் மொச்சை
தட்டைப்பயறு செடிகளில் குதிரைச் சவாரி செய்கிறது.....

இலந்தைப் பழங்களைச் சுமந்து செல்லும் வண்டினங்கள்
மஞ்சனத்தியில் இளைப்பாறிக் கொள்கின்றன...

தூவானக் காற்றுடன் சிறுதுளிமழை
கரிசலை நனைக்கிறது 
அதலைச் செடிகளுக்குள் முகம் பதிக்கும் தேள்கள்.....

குனிந்தும் நிமிர்ந்தும் 
தேடுகிறாள் பேச்சி
கரிசலுக்குள் கருப்பு வைரத்தை...

ஆக்கம்:
கவிஞர் சாத்தன் குன்றன்...
மதுரை மாவட்டம்.
+91 88383 05797

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக