ஜூன் 07, 2024

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - புதுக்கவிதை

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - புதுக்கவிதை
முனைவர் ப.விக்னேஸ்வரி

இறைவன் உயர்ந்த படைப்பாளி
என்னையும் மண்ணில் படைத்தான் மகிழ்வுடனே
 உயர்ந்த எண்ணங்களைச் சுமப்பவள்
 ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு
 இறக்கம் என்பது இறைவன் செய்யும் சோதனை
 இரண்டையும் தராசை போல் எதிர்கொள்கிறேன்.....
 வீழ்ச்சியில் கலக்கமும்
 எழுச்சியில் மயக்கமும் கொள்ளாமல்
 பகுத்தறிவு சிந்தனையோடு 
வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்....
 வெற்றியை நோக்கி நகர்வதே 
வாழ்வை நோக்கிய என் பயணம்……
 ஜனனம் தகப்பனின் படைப்பு 
மரணம் ஆண்டவனின் அழைப்பு 
இடைப்பட்ட வாழ்வை அரிதாரம் பூசாத
 நடிப்பாய்யிருக்க தாதாசாகிப்பால்கே
 விருதும் பெற்றுவிட்டேன்...
 பட்டங்கள் பல  பெற்றாலும் 
பகட்டில்லாமல் பயணம்...
 சரஸ்வதியின் கைப்பிடித்து
அறிவென்னும் அனுபவக் கல்வியை
 நந்தா விளக்கின் சுவாலைகளாய் 
 சுடர் விட்டுக் கொண்டிருக்கிறேன்…..
 எத்தனை தடைகள் வந்தாலும் 
படிக்கற்களாக மாற்றி விடுவேன்
 ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட அல்ல
நம்மால் தீர்மானிக்கப்படுவது
நான் வான் நோக்கி என் சிறகுகளைச்
 சிலாகித்துக் கொண்டிருக்கிறேன்...
 அனைத்தையும் கடந்து வெற்றித்தடம் 
பதிக்க விரைந்நு கொண்டிருக்கிறேன்...
வெற்றி என்ற வெளிச்சத்தை 
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன் ...
நான் நிரந்தரமானவன் அல்ல
நான் அருவி விழுந்தாலும்
 என் பயணம் இலக்கை 
நோக்கியதாகவே ஓடிக்கொண்டிருக்கும்
 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.....

முனைவர் ப.விக்னேஸ்வரி,
இணைப்பேராசிரியர்,
 தமிழ்த்துறை, 
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை 641105

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக