ஏப்ரல் 08, 2024

சாதி என்பது குரூரமான யதார்த்தம் - நூலறிமுகம்

*நூலறிமுகம்*

சாதி என்பது குரூரமான யதார்த்தம்! தொ.பரமசிவன் (நேர்காணலும் - கட்டுரைகளும்) - நூல் அறிமுகம்.

அறிஞர் தொ. ப. வின் இந்த நூல் மட்டுமல்ல.
அவர் எழுதியதோ அவரைப் பற்றி எழுதியதோ, எப்போது படிக்கத் தொடங்கினாலும்  ஒரு மிகையார்வம் ஏற்படும். வாசிப்பினூடே ஒரு அறிவுப்பசி தாகமெடுக்கும். ஏனென்றால் அவை புதைத்து வைத்திருக்கும் பலரும் அறிந்திடாத ஆச்சரியங்கள் ஏராளமாக இருக்கும். 

அப்படி என்ன இருக்கிறது இந்த நூலில்?
வாசிப்பில் கண்ட அந்நூலின்  சில  தெறிப்புகள்:

* அழகர் கோவில் பகுதிகளில் மக்களிடம்  இருக்கும் சித்திரை விடுதி பழக்கம்.

* சிறு தெய்வங்கள் என்பவை சாதிய அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் பிறப்பதற்கு முன்பே பிறந்தவை.

* பழனி கோவில் பிற்படுத்தப்பட்டோர் இடம் இருந்து எவ்வாறு பிராமணரிடம் போனது.

* மறுவாசிப்பு மறு பார்வை ஏன் தேவைப்படுகிறது?

* மேல் கீழ் என்கிற அடுக்கு முறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம்தான்.

* திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போய் விட்டதற்குக் காரணம் வாக்கு வங்கி அரசியல்.

* சிவப்புதான் அழகு எனும் விளம்பரங்கள் :உலகமயமாக்கல் பண்பாட்டின் மீது செய்யும் வன்முறை.

* சாதி ஒழிப்பை விட சாதிக் கரைப்பு தான் சாத்தியம்.

* தொ.ப. விற்கும் கமலஹாசன் தந்தைக்கும் இருந்த நட்பு.

* தொ.பாவின் இறப்பு அவர் விரும்பிய நாளிலேயே நடந்த விதம்.

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன், கே. கே. நகர் மேற்கு,  சென்னை.
தொகுப்பாசிரியர் : மணா
வருடம்: 2022.

*நூலறிமுகம்*:
"ஆய்வுச் செம்மல்"
மதுரை செல்லூர் உபாத்தியாயர்,
முனைவர் ச.தமிழரசன்.
08.04.2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக