உயிர் அணுக்கள் உறங்கி கிடந்த நேரம்
உசிப்பி விட்டான் காமன் நெஞ்சின் ஓரம்
மடைதிறந்தது
மௌனம் கலைந்தது
மடியில் பாரம் நிறைந்தது
புலம்பெயர்ந்தேன்
புதுவுடல் புகுந்தேன்
இறுதியில் பூமியில் வந்து விழுந்தேன்
மௌனமாய் சில நிமிடங்கள்
தாய் மார்போடு நான் உறங்க
தாயும் உனக்கில்லை
தாய்நாடும் உனக்கில்லை
தாலேலோ பாடிடவும்
தாய்மொழியும் உனக்கில்லை
அடையாளத்தை அழித்தான்
அடையாளம் அற்ற
அடையாளத்தை கொடுத்தான்
புத்தனும் நீயே
புத்தகமும் நீயே
போர் நடந்து முடிந்த
போர்களமும் நீயே
மௌனத்தில் தொடங்கிய
சத்தமும் யுத்தமும்
மௌனத்தில் முடிகிறது
ஏனென்றால்
வாழ்க்கையே சில நிமிடங்கள்.
- சு.தமிழ்ச்செல்வன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழகம்
திருவாரூர் -610005.
புலனம் - 9943779890
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக