ஆகஸ்ட் 20, 2023

உனக்குள் சூரியன் - புதுக்கவிதை

உனக்குள் சூரியன் - புதுக்கவிதை

உன்னை எரித்துக்கொள்
ஆதியின் நெருப்புச் சுவாலை
பூமியெங்கும் படரட்டும்!!!!

உனக்கானவை உனக்குள்ளே
யானைச் சங்கிலியைக் கழற்றிடு

ஓரறிவும் ஆரறிவும் உனக்குள்ளே
முயலாமைத் தத்துவத்தை ஏற்றிவை

அணுவும் இயக்கமும் உனக்குள்ளே
தேனீக்களின் நடனமொழி புரிந்திடு

நீரும் உனக்குள்ளே ஆழ்கடலின் அமைதித் தத்துவத்தை உணர்ந்திடு

நெருப்பும் உனக்குள்ளே 
எரிஎண்ணெய்யில் ஒளிகொடு

காற்றும் உனக்குள்ளே
காலநிலைப் பருவங்களாய் மாறிடு

வானம் உனக்குள்ளே
மழையைப் போல் மண்ணைப்பார்த்திடு

நிலமும் உனக்குள்ளே
பொறுமைக் கோட்பாட்டைப் புரிந்திடு!!!!

சூரியன் உனக்குள்ளே
சமத்துவமில்லா சமூகத்தை எரித்திடு!!!

.....பூங்குன்றன்....
முத்துநகர், 3 வது வீதி., பொன்மேனி சாலை. மதுரை மாவட்டம்.
அலைப்பேசி: 9944106713

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக