உலகே பாரதி
(பஃறொடை வெண்பா)
தூங்கிசைச் செப்பலோசை
உலவும் நிலவும் உதிக்கும் கதிரும்
அலையும் கடலும் அழகு வனமும்
நிறைந்த நிலமும் நிலைத்த மலையும்
பரந்த உலகமே பாரதி நீதான்
சிறந்த தமிழாய்ப் பிறந்து வரவே
கவிதையில் தோன்றிடு வாய்.
ஆக்கம்:
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன் | 11.12.2022.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக