சோழவந்தானூர் பெரும்புலவர் இலக்கணக்கடல் அரசஞ்சண்முகனாரின் 155ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கு மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறையில் 15.9.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை செந்தமிழ் கலை மற்றும் கீழ்த் திசைக் கல்லூரியானது மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியுடன் இணைந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பிறந்தநாள் விழா கருத்தரங்கை நிகழ்த்தியது. விவேகானந்த கல்லூரயின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோரின் ஆசியுடன் நிகழ்வு தொடங்கியது. விவேகானந்த கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் கி.வேணுகா வாழ்த்துரை வழங்கினார். 'அரசஞ்சண்முகனாரின் வாழ்வும் பணிகளும்' என்ற தலைப்பில் செந்தமிழ்க் கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் பா.நேருஜி சிறப்புரையாற்றினார்.
சோழவந்தான் அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேனாள் முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியை திருமதி பூ.மகாலக்ஷ்மி 'அரசஞ்சண்முகனார் - இலக்கணக் கடல்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் கு.இராமர் நன்றியுரை கூறினார். அரசஞ்சண்முகனார் தமிழ்மன்றம் மின்குழு நிர்வாகி உதவிப்பேராசிரியர் சு.முத்தையா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முனைவர் கோ.பாலமுருகன் உட்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக