பிப்ரவரி 13, 2022

பூமியை வாடகைக்கு விடுபவர்கள் (புதுக்கவிதை)

பூமியை வாடகைக்கு விடுபவர்கள் (புதுக்கவிதை)


உங்களிடம்
எப்படி வந்தன
இத்தனை நிலங்கள்
எப்படி வந்தன
இத்தனைத் தோப்புகள்
எப்படி வந்தன
இத்தனைச் சொத்துகள்
எவ்வாறு அடைந்தீர்கள்
இந்த ஆதிக்கத்தை
எவ்வாறு பெற்றீர்கள்
இந்த அதிகாரத்தை
எவ்வாறு வந்தன
இத்தனை வீடுகள்
நீங்கள்
வாடகைக்கு விட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்
நாங்கள்
வாடகைக்குப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்
பூமிக்கு வயது கோடியாம்...
நீங்கள் எப்படி வாடகைக்கு விடுகிறீர்கள்?

கவியாக்கம்.
முனைவர் ச.தமிழரசன்.
30.01.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக