ஜனவரி 10, 2022

புத்தாண்டே மாற்றமென்ன...

புத்தாண்டே மாற்றமென்ன... - புதுக்கவிதை

புத்தாண்டே வருக....!
புத்தாண்டு நமக்கிங்கு
ஆங்கிலமா...தமிழ்நலமா...?

தமிழ்ப்புத்தாண்டு பிறப்பதிங்கு
தையா..சித்திரையா...?

பாரடா நாம் மறத்தமிழர் ..
கூவித்தொண்டைதான் வலிக்கிறது...
பழம்பெருமைபேசித்தான்
நிகழ்காலம் நகர்கிறது.....

நாளைக்கு நீவிட்டுச்செல்ல
உன்செயல் என்ன இருக்கிறது....

கேள்விக்கு விடையின்றி
வாழ்க்கை விடுகதையாய் முடிகிறது..

எந்தநாள் வந்தாலும் ஏழைக்கு
மாற்றமென்ன இருக்கிறது..  

நமக்கு குடிப்பதற்கும்...ஊன்
கடிப்பதற்கும் விடுமுறையாய் அது வருகிறது....

உழைத்துவாழும் ஏழைக்கு இதுவும்... இன்னொரு நாள்போல்தான்அது விடிகிறது.


மா. அழகுவேல், 
முதுகலை தமிழ்த்துறை இரண்டாமாண்டு, 
செந்தமிழ் கல்லூரி, மதுரை
9952582996

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக