அந்தமில்லாக் கனவு.
கவியுளம்
அசைவற்றுக் கிடக்கிறது
ஆழ்துளை மனசு.
தோண்டியவர் யாரெனத் தெரியவில்லை.
புனைவுக் கையொன்று
தோண்டிப் போட்ட
ஆழ்குழியின் அடிதேடி
பயணிக்கிறது கவியுளமாய்.
அடுக்குகளின் சிக்கலில் மயங்கிச் சிதறிவிழும்
தொன்மக் கலைகள்.
ஆதி உருவாக்கலின்
படைப்புக் கணத்தை
தொட்டு ஸ்பரிசிக்க
நினைவுப் படுகைகளை
ஒவ்வொன்றாய் உடைக்கிறது.
நழுவி விழும் நட்சத்திரம்;
தூக்கத்தில் நடக்கும் நிலா;
சுழன்றும் வெயில் பின்னும் சூரியன்.
அனைத்தும் துணைகொண்டு
ஆழப்பயணிக்கிறது
அந்தமில்லாக் கனவு,
தேடும் கைதான்
தோண்டிய கையெனத் தெரியாமல்.
ஜனமித்திரன்
ஆங்கிலப் பேராசிரியர்,
மதுரை.
98423 65323
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக