புரட்சி வித்து பாரதி! - புதுக்கவிதை
இருபதாம் நூற்றாண்டில்
நீ அதிசயமானவன்
உனக்குப் பசியெடுத்த போதும் தமிழுக்குச் சோறு ஊட்டினாய்!
தேசத்தின் தாகத்திற்கு - உன் செந்நீரையே தண்ணீராக்கினாய்!
மனிதனையே மனிதன் நேசிக்காத இந்த அரக்க நூற்றாண்டில் -நீ மிருகங்களும் மலைகளையும் கூட உன் ஜாதி என்றாய் கூட்டமைன்றாய்.!
சமையலறைச் சமாதியில் புதைந்திருந்த பெண்களை மீண்டும் உயர்த்தெழுப்பியது உன் உரமிக்க கவிதைகளே!
புரட்சிப் பயிரை விளைவிக்க
உம் பேனாக்கள் மூலம்
கவி வித்துக்களைத் தூவிய மகாகவியே
சாதி, மதம், இனம் போன்ற
ரத்தப் பசியுள்ள
ராட்சதப் பலிவாள்களை
இதயத்திலிருந்து எடுத்து
மனிதம் என்னும் சக்தியின் பாதங்களில் வைக்கச் சொன்னாய் நீயே!
பாரதி நீர்
விதைத்த விதையால்
நாங்கள் நிழல்களின் சொர்கங்களை விட
நிஜங்களின் நரகத்தையே நேசித்துப் பூசிப்பவர்களானோம்...
புதிய உலகை உருவாக்க
எங்கள் மூச்சுக்காற்றே புயலாய் உருவெடுக்கும்!
எருவாக எலும்புக் கூட
வளரும் சந்ததிக்கு
வளர்ந்துவிடு என்றும்
உன் சமுதாயத்தில் ஒரு புரட்சி பூகம்பத்தைப் பிரசவிக்க
நீ மடியலாம்...
இனியொரு விதி செய்வோம் - அதை எந்நாளும் காப்போம் தனியொருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிப்பெற்றுப் பதவி கொள்வார்
எனும் கவி முரசுகளை முழங்கிய கவியே! -
பாரதி
இப்போது மட்டுமல்ல எப்போதும் குரலுயர்த்திக் கூறுவோம்
இந்த நூற்றாண்டில் நீ அதிசயமானவன் என்று!
உன் ஒருவனின் வருகையால் .
ஒரு நூற்றாண்டே கழுவப்பட்டுள்ளது!
--------------------
ரட்சியா குபேந்திரன்,
இளங்கலை ஆங்கில மாணவர்
kubendranmallika@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக