தன்னம்பிகையும், தளராத நானும்!!
தரணியே என்னை தூற்றியது,
தயங்காது நான் நின்றேன்.ஆம்,
வீழ்ந்தவன் எழலாம்,
எழுந்தவன் விழலாம்...
சோம்பேறி இவன் என்று
சொன்னவர் பலர்.....
சோற்றுக்கே வழியில்லை என்று
சொன்னவர் பலர்.....
வறுமையின் பிள்ளை என்று
தூற்றியவர் பலர்.....
வாய் சொல் வீரன் என்று
தூற்றியவர் பலர்....
தூற்றியவன் வாய் அடைத்து
மயங்கினான்,மயங்கியவன் மாண்டும் போனான்,
மயங்காத என்னை பார்த்து.....
ஆயுரம் குறை சொல்லி
அர்த்தமற்று பேசுவார்கள்
அற்ப மானிடர்கள்'....
உன்னை பாதாளத்தில் தள்ளுவார்கள்,
இது பாழான உலகம் தானே,
சாக்காடையடா இவன்,
யோகியனடா இவன் என்று
சாடைப் பேசுவார்கள் , பேசட்டும்..
சங்கடங்கள் வரும்
எதிர்த்து நில்...
துவண்டு போகாதே
தோல்வி காண் -உன்
தோள்களில் இன்னும்
பலம் உண்டு...
இலக்கை எட்டி
வெற்றியை பிடிக்க
அடக்கமாய் இரு,
அன்பாய் பேசு..
வாயை மூடு-உன்
வாளை எடு..
உன் புத்தியைத் தீட்டு
புது திறமையை கூட்டு
திறம்படப் பேசு..
அதிகாரம் தேவையில்லை
புது அகராதியை உருவாக்கு
உன் எதிரிகளை அதற்கு எருவாக்கு...
உயர்ந்தவன் இவன் என்று
புகழ் உச்சியில் வைப்பார்கள்
உன்னை சாக்கடை என்று பேசியவன்
உன் தோளில் பூக்கடை போடுவான்,
நீ யோகியமா என்றவன்
தாங்கள் செய்த பாக்கியம் என்பான் -அன்று
என்னை வெறு வாய் என்றவன் -இன்று
என்னை திருவாய் என்பான்.
அன்று தரணியே என்னை தூற்றியது
தயங்காது நான் நின்றேன்.
இன்று தரணி என்னை போற்றியது
மயங்காது நான் நிற்பேன்..ஆம்
எழுந்தவன் விழலாம்.....
வீழ்ந்தவன் எழலாம்....
தன்னம்பிக்கையே, தரணி போற்றும்!!
க.கௌதமன்,
இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு,
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி,கரூர்.
தொலைப்பேசி எண்: 6383265249
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக