புதுக்கவிதை
தலைப்பு: மரணித்து இருப்பவன்.
ஜனமித்திரன்.
மரணம் பற்றிய
செய்திகள் பல
சரியாய்க் கிடைப்பதில்லை.
நிறையக் கதைகள்;
நம்ப முடியாத்
துக்கப் பொழுதுகள் என
பலருக்கான மரணம்
திடீரெனக் கண் விழிக்கின்றது.
மூடிக் கிடக்கும்
இமைகளுக்குப் பின்,
திறந்து கிடக்கும் அனேகக் கனவுகள்
நிறைவேறாமலேயே நின்று விடுகின்றன
உறைந்து போன
திரைப்படக் காட்சியாய்.
எல்லா மரணங்களும்
சரியாய் நிகழும்
நேரம் எப்போது வாய்க்கும்?
எனக்கான மரணம்
சரியாகவோ,தவறாகவோ
நேரும் தருணத்தில்
என்னால் அதைக்
கண் கொண்டு
பார்க்க முடியாது.
அப்போது நான்,
அந்தப் பொழுதில்
மறந்து போய்
வேண்டுமென்றே தவறுதலாய்
இறந்து போயிருப்பேன்.
ஜனமித்திரன்
இணைப்பேராசிரியர்,
மதுரை -9.
9842365323
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக