பிப்ரவரி 01, 2020

சல்லிக்கட்டு - புதுக்கவிதை

சல்லிக்கட்டு - புதுக்கவிதை
*************************
ர.தனுஜா 
4/771 அடைக்கலம் பிள்ளை காலனி 
ஐராவதநல்லூர் மதுரை 625009
 dhanujadeja664@gmail.com

ஆண்டு தோறும் பயிற்சி கொடுத்தது 
அந்த ஒரு நாளுக்காக ....
மாமன் மகளை மணக்க, முறைப்பையன் 
மோதிடும் அக்களம்...
வீடு வாசலை விட்டுவிட்டு , ஊரே  வாடிவாசலில் காத்திருக்கும் அத்தருணம்...
சலங்கை ஒலியும் கொம்பின் மிரட்டலும் கேட்க 
மீசைமுறுக்கியவண்ணம்  காளையரும்...
திமிர்கொண்டு திமிலை அடக்கும் வீரனை 
எதிர்பார்த்த வண்ணம்  மங்கையரும்...
வெல்லப்போவது காளையா! காளையனா!
பரபரப்புடன் மக்களும்...
தன் சாதிக்காரனுக்குத் தான் வெற்றிக்கோப்பை 
ஆணவத்துடன்  தலைவர்களும்.. நிற்க!
அழிந்துவிடுமோ என்றெண்ணிய பாரம்பரியம் 
புதுப்பொலிவுடன் துவங்கியது...
எம் தமிழரின் வீர விளையாட்டு 
பாரெங்கும் போற்றும் சல்லிக்கட்டு ...!

dhanujadeja664@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக