டிசம்பர் 20, 2019

கவிதை : நாளைய பெண்மை? - முனைவர் ந.தமிழ்மொழி

முனைவர் ந.தமிழ்மொழி, 
உதவிப் பேராசிரியர்,
 மதுரை.
tamilmozhysatish@gmail.com


நாளைய பெண்மை?
----------------------------------------
இரத்தக்கறைகளாக ... 
மனிதம் ?
ஆம்'மனிதம்தான்.. 
அப்பா, அண்ணா, தம்பி, 
தோழன்... என்றாலும் 
விடுவதில்லை ... 
கொடூர வேட்டைநாய்கள் 
வாழும் தேசமிது' 
துகில் உரியும் சபைகள்
 நாளுக்கு நாள்
 மாநாட்டுக் கூட்டங்களாய் 
கைக்கோர்க்கிறது. 
படிக்கும் போதும் 
காதால் கேட்கும்போதும் 
துகிலின் நெடி ...
 இரத்தக் கறைகளாக .. 
ஊரெங்கும் கனத்தது; 
புனைகதைகளுக்குப் 
பெயர் போனவர்கள் 
நம் பெண்கள் ... 
மன வலிமை எங்கே? 
பார்க்கும் இடங்களில் 
கயவர்களால் 
பாழ்பட்டுக்கிடக்குது சமுதாயம் 
நெஞ்சைப் பதறவைத்தது 
பொல்லாதது (பொள்ளாச்சி) 
சாமானியர்கள் தான் ... 
பூலான் தேவிகளுக்கும் 
பாஞ்சலிகளுக்கும் 
தோன்றியது வீரம்!வீரம்! வீரம்! 
கனத்த இதயங்களோடு நகர்கிறது ..
 நாளைய பெண்மை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக