பாகனூர்ச்செல்வன்
உதவிப்பேராசிரியர்
சோழவந்தான்
மதுரை மாவட்டம்.
1.வேண்டாம் எனவீ தியோரத் தெறிந்த
விதைகூட வீரிய மாகித் தலைமுறை
தோறும் உதவும் தரணியில் தாய்க்குச்
சிறிதேனும் நன்றியோடு வாழ்.
2.மாநகர் எங்கும்பா லித்தீன் அகப்பட்ட
நஞ்சுணவு நாறிக் கிடந்த பொழுதினும்
சீச்சீ எனப்புறந் தள்ளி வளம்சேர்
இயற்கை மனிதனாய் வாழ்.
3. தன்னை வெறுத்தார்க்கும் தன்னுடல் சாறென
தன்னையே உண்ண வழங்கி உணர்வை
அருளி உயிர்தந்து என்றென்றும் காக்கும்
முருங்கை கருத்தராய் நேசி.
4.ஒருகைப் பிடிச்சோறு உண்பதிலும் இன்று
ஒருபத்து சாதி யுழைப்பென்று சத்துணவு
சாதிவெறி என்றும் தொலைத்து தலைமுறை
ஆதியை எண்ணி நேசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக