கவிதைத் தலைப்பு: கனாத்திறம்
ஜனமித்திரன்.
ஆங்கிலப் பேராசிரியர்,
மதுரை.
கனாத்திறம் உரைத்த காதையின்
கடைசிப் பக்கத்தின்
கிழிபட்ட ஓரங்களில்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
ஒரு கோடிக் கனவுகள்.
அவரவர் வானத்தில்
அவரவர் கனவுகள்
அநாதி காலமாய்
முளைத்துக் கிடக்கின்றன.
முதல் கனவு:
"கைத்தலம் பற்றக்
கனாக் கண்டேன்."
இரண்டாம் கனவு:
"மூத்தவர் சன்னதியில்
வதுவை செய்வோம்."
ஆண்டாளின் கண்ணணும்,
பாரதியின் கண்ணம்மாவும்
மாறி மாறிச் சொல்கிறார்கள்:
"ஆதலினால் காதல் செய்வீர்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக