தீக்குள் விரல்வைத்துத் தித்தித்தான் தீத்தன்னைத்
தாக்குமென் றெண்ணா திருந்தான் - நிலைத்திருந்து
பாக்களைப் பூக்கவி டான்திருந்தான் என்றோவத்
தீக்கனல் தின்றதுட லை.
பாவை வடித்தான் பசியால் துடித்தாளப்
பாவை விழிநீர் வடித்தாள் - குழந்தையப்
பாவை யழைத்திட நாவறண்டு போனதப்
பாவை திடுவாரென் றோ?
- மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன்
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
திண்டுக்கல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக