எனது கவிதை
#கவின்மிகு #காற்று
காலம் கடந்த காற்று
கல்லைத் தேய்த்த காற்று
கணநேரம் இல்லாமல்
வாழ முடியாத காற்று
கவிதையாய்ப் பொதுவெளியில்
கடந்துசெல்லும் காற்று
காதுக்குள் ஏதோ
கவிதை பாடும் காற்று
காதலியின் கூந்தலைக்
கலைத்து அழகாக்கும் காற்று
ஊடலின் பொழுதுகளை
உறங்கவைக்கும் காற்று
பாடலின் பண்களைப்
பசுமையாய் ஏந்திய காற்று
கோடையில் கோபிக்கும் காற்று
குளிரில் நெருக்கும் காற்று
வசமாய் தழுவி
வாலிபம் இனிக்கும் காற்று
ஆசையின் ஓசைகளை
அமைதியாய் காக்கும் காற்று
ஆற்றங்கரைப் பொழுதுகளை
அனுபவமாக்கும் காற்று
அசைந்தாடும் கீற்றுகளை
ஆட்டித் தாலாட்டும் காற்று
அம்மியையும் அசைத்துப் பார்க்கும்
ஆடிக் காற்று
அன்பானவர் கூடலிலே
அணுக முடியாத காற்று
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது அழகு.
கல்லைத் தேய்த்த காற்று
கணநேரம் இல்லாமல்
வாழ முடியாத காற்று
கவிதையாய்ப் பொதுவெளியில்
கடந்துசெல்லும் காற்று
காதுக்குள் ஏதோ
கவிதை பாடும் காற்று
காதலியின் கூந்தலைக்
கலைத்து அழகாக்கும் காற்று
ஊடலின் பொழுதுகளை
உறங்கவைக்கும் காற்று
பாடலின் பண்களைப்
பசுமையாய் ஏந்திய காற்று
கோடையில் கோபிக்கும் காற்று
குளிரில் நெருக்கும் காற்று
வசமாய் தழுவி
வாலிபம் இனிக்கும் காற்று
ஆசையின் ஓசைகளை
அமைதியாய் காக்கும் காற்று
ஆற்றங்கரைப் பொழுதுகளை
அனுபவமாக்கும் காற்று
அசைந்தாடும் கீற்றுகளை
ஆட்டித் தாலாட்டும் காற்று
அம்மியையும் அசைத்துப் பார்க்கும்
ஆடிக் காற்று
அன்பானவர் கூடலிலே
அணுக முடியாத காற்று
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது அழகு.
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
08.06.2019
08.06.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக