மூச்சடக்கி
முகஞ்சுழித்து
உயிர்பிடித்து
காண விரும்பாமல்
முகந்திருப்பி
நாம் கடக்க முயல்வது
குப்பைவண்டியை அல்ல
நம் அழுக்கையும்
வழித்துபோட்டு
வழிநெடுக சொட்ட.. சொட்ட..
நாற்றத்தால்
செவிட்டில் அறையும்
சகமனித வாழ்வு
🌟
தாஜ்மஹாலின்
முன் இருக்கையில்
கட்டியணைத்து
சுயமி எடுக்கும்
காதலர்களின்
"க்ளிக்" சத்தத்தில் கேட்கிறது
பதினான்காவது
பிரசவ வலியில்
உயிர் கரைத்த
மும்தாஜின் முனகல்
-துளிர்.
மதுரை.
பேச : 9944861050
மின்னஞ்சல் : thulirvinodh@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக