நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
அகிம்சை
அகிம்சை (ஒலிப்பு) (Ahimsa) பாளி ‘காயப்படுத்த வேண்டாம்' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும். இந்திய சமயங்களில் அகிம்சை என்பது ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.
“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹீம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது காயம் ஏற்படுத்தாதீா்கள். “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள். அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.
சைனம், இந்து சமயம், பௌத்தம்ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்து கொண்டது. பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அஹிம்சை கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அஹிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அஹிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது.மிக பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்த வேண்டாம் ‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக