கேப்டன் மில்லர் திரைப்படம் மீதான விமர்சனம்.
ஆதிக்கம் பன்முக வடிவத்தில் உருமாறி கோவில் கட்டியவனையே நுழைய விட மறுக்கும் அதிகார அரசியலை இப்படம் பேசுகிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் கோவில் நுழைவு எங்கள் உரிமை அதை எந்த வடிவில் தடுத்தாலும் எதிர்கொண்டு உரிமை பெறுவோம் என்பதே படத்தில் சொல்லப்பட்ட கருத்து.
இதில் "என்றும் மாறாதது; நிலையானது" என்று விளக்கப்படும் சனாதனம் வேறொன்றுமில்லை. சாதி ஆதிக்கம்தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது படக்குழு.
"ஏழை என்றும் அடிமை என்றும், எவரும் இல்லை சாதியில், இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே' என்ற பாரதியின் வரிகளைக் கதாநாயகி வாசிக்கும் பொழுது திரையரங்கமே அதிர்கிறது.
ஆங்கிலேயர்கள் என்பது இப்படத்தில் ஆதிக்கவாதிகளைப் பிரதிபலிக்கும் குறியீடே.
இன்னமும் கோவில் நுழைவு உரிமை பற்றி படம் எடுக்க வேண்டிய தேவை உள்ளது . மொத்தமும் தேவைப் படாத காலம் வரை கலை இலக்கிய வழியில் உரிமை மீறல்களை கவனப் படுத்த வேண்டியுள்ளது.
எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக