ஜூன் 08, 2021

நகர் துஞ்சும் நல்யாமம் - புதுக்கவிதை

நகர் துஞ்சும் நல்யாமம் - புதுக்கவிதை.



​ஒரு மிடறு உயிரின் திரட்சி.
​உள் நெளியும் அரவமென
​நுனி முதல் தலைவரை சுருண்டிருக்கிறது.
​ஒவ்வொரு மிடறாய் விட்டு
​உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோப்பையில் நிரம்புகிறது.
​நிகழ்வுக் குமிழிகள் கொப்பளித்துக் கொப்பளித்துக் கோப்பையின்
​மெல்லிய விளிம்பில்
​இரத்தக் கவிச்சியுடன் மோதுகின்றன.
​ஒவ்வொரு மிடறிலும் ஒரு துளி வாழ்வு.
​நீ குடித்ததும் நான் குடித்ததும்
​கடந்து போன முன் பிறவிகளின் எச்சங்கள்.
​போனமுறை குடித்த மிடறு
​புளித்த ஏப்பமாய் வருகிறது.
​இந்த முறை உன் விஷம் தடவிய உதட்டில் எச்சில் துப்பித் தா
​குடித்து விட்டுக் கடவுளாகிறேன்.
​நீ மட்டும் வனாந்தரப் பிசாசாய் அலைந்து கொண்டிரு.
​நம் காதல் துமிளிகள்
​கடலில் கரைகின்றன.
​இருவருமாய்ச் சேர்ந்து
​உறிஞ்சிக் குடிக்கலாம்
​அல்லது அருந்திச் சாகலாம்.
​ஈதலும் ஈதலுமே வாழ்வு.
​சீக்கிரம் வா.
​நகர் துஞ்சும் நல்யாமம் தகித்திருக்கிறது.

​(துமிளி- நுரை)

கவிஞர் ​ஜனமித்திரன்.
​இணைப்பேராசிரியர்,
​மதுரை.
98423 65323
​ 07.06.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக