டிசம்பர் 05, 2020

அம்மா - புதுக்கவிதை

எவ்வளவோ கவிப் படைத்தேன்!..
உனக்கு எழுத மறந்தேனோ?..
ஆயிரமாயிரம் கவிப் படைத்தாலும்
எனக்கு பிடித்த முதல் கவிதை
நீதானே அம்மா!!!...

பத்து மாதம் சுமந்தவள்!..
பத்திரமாய் பார்த்தவள்!..
வயிற்று வலி பொறுத்தவள்!..
வயிராற உணவு கொடுப்பவள்!..
நீதானே அம்மா!!!...

நீ நிலா சோறு கொடுத்ததை
நினைச்சாலே இனிக்குதம்மா!..
உன் முந்தானைய பிடிச்சு
நடக்கையில உலகமே மறந்தேனம்மா!..
உன் காலடியில் எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்கயில கலகல-னு சிரிச்சேனம்மா!..

என் மழலைப் பேச்சு கேட்கையில...
நீ மனதார சிரிக்கையில...
நான் "அம்மா" என்று அழைக்கையில...
என்னை கட்டியணைத்து கொண்டவள்!...
நீதானே அம்மா!!!...

தொட்டிலில் நான் கிடக்கையில..
நீ எட்டி வந்து பார்க்கையில....
நான் தூங்குவது போல நடிக்கையில....
என்னவொரு ஆனந்தம் உனக்குள்ள!...
           
                       
                       ஜ.சுவேதா
                       இரண்டாம் ஆண்டு கணிதவியல்
                       அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்
                       கோயம்புத்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக