வல்லமைப் பாவலன் - பாரதி.
(வசன கவிதை)
அன்பிற்கினிய ஆசிரியர்கள்...
அனைவருக்கும்
வணக்கம்!
*
உங்களுக்கு..
பாரதி..
பிறந்தநாள்
வாழ்த்துகள்..
*
பாரதி..
தமிழ் எழுத்துக்களை
மட்டுமன்றி..
இவ்வுலகிலுள்ளோர்
ஒவ்வொருவரும் வாழ..
ஒவ்வொன்றும் வாழ..
எழுத்துகளை மட்டுமன்றி..
தமிழ்க்கவிதைகள் எழுதி.. இலக்கியம்படைத்து..
தமிழையே..
தன்னையே
ஆயுதமாக ஆக்கியவன்..
இந்தியத்
துணைக்கண்டம் கடந்து
இதயங்களை..
மனிதத்துவமாய்..
இயங்கச்செய்த..
இன்கவியவன்..
நீர் அவர் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்.
*
வள்ளுவன்
இளங்கோ
வழிவந்து..
வான்புகழ்கண்டு
எம் தமிழ் வாழ..
வல்லமை தாராயோ என
வழக்கிட்ட பாவலன்!
கஞ்சி குடிப்பதற்கில்லாக்
காரணங்கள்..
சொன்னவன்!
அதற்காய்--
உழவே உயர்ந்தது என்று
உரத்துச்சொன்னவன்
வழிநின்று..
உழைக்கச்சொன்னவன்!
நீதி, உயர்ந்தமதி,
கல்வி, அன்பு
நிறைய உடையவரே
மேலோர் என்றவன்!
சாதி மறுத்து
பொதுவுடமை பேசிய..
கவிஞன்!
தமிழகத்தின்..
இந்தியத்தின்..
உலகத்தின்..
மானுட நலனுக்காக..
விழித்தெழச்சொல்லி..
நீடு துயில் நீக்கப்
பாடிய பாவலன்!
நம்
தலைநகரில்
இன்றவன் கவிதை..
மழை பொழியட்டும்!
அங்கிருந்து கொண்டு
இங்கிருப்போர் வாழ..
அவன் கவி பொழியட்டும்!
*
வந்து போ
பாரதி..
பெருங்காற்றாய்..
இடியாய்..
மின்னலாய்..
மழையாய்..
அக்கினிக்குஞ்சாய்..
விவசாயம் காக்க
விதை முதலாய்..
விழுந்து கிடந்து..
உருண்டு புரண்டு..
அடிகள் மிதிகள்
அனைத்தும் வாங்கி..
உதைக்க வந்தோர்க்கு
உணவுகள் வழங்கி..
வெயில் மழை
விடிகாலை மறந்து..
இரவும் பகலும்
வெளியிலே தங்கி..
நம்பிக்கை ஒன்றையே
உன்னிடம் வாங்கி..
இருண்டு கிடக்கும்
இதயங்கள் பகைத்து..
இந்தியா வாழ..
வாழ்க்கை பெற..
வாழவைக்கத் துடிக்கும்..
விவசாயிகளைப்
பார்க்க..
வந்து போ
பாரதி..
முடிந்தால்..
முடிந்தால்..
எங்கள்
கல்லூரிப்பக்கமும்..
************************
கவிஞர் அழகுபாரதி
பேராசிரியர்,
மதுரை மாவட்டம்.
பேச: 94434 54446.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக