செப்டம்பர் 06, 2020

கல்விக்கோலம் - புதுக்கவிதை.

கல்விக்கோலம் - புதுக்கவிதை.

புத்தகத்தில் உள்ள பாதியை புத்தியில் சுமந்தது அக்காலம்!..
புத்தகங்கள் முழுவதையும் புறமுதுகில் சுமப்பது இக்காலம்!..
ஆசிரியரை கண்டு பணிந்தது அக்காலம்!...
ஆசிரியர் தானே என்று துணிந்தது இக்காலம்!...
மாணவன் பட்டாம்பூச்சியாய் பறந்தது அக்காலம்!...
புத்தகப் புழுவாய் மாறியது இக்காலம்!..
தகப்பனின் உயர்வுக்காக படித்தது அக்காலம்!...
மதிப்பெண்களின் உயர்வுக்காக படிப்பது இக்காலம்!..
தானாக தமிழ் படித்தது அக்காலம்!..
தாயின் அதட்டலில் தமிழ் கற்பது இக்காலம்!..
தேவைக்காக ஆங்கிலம் கற்றது அக்காலம்!...
தேவையில்லாமல் தமிழை ஆங்கிலம் தின்றது இக்காலம்!..
கட்டி கரும்பாய் கல்வி இனித்தது அக்காலம்!...
எட்டி காயாய் கல்வி கசக்கிறது இக்காலம்!...
மாணவனை நல்ல மனிதனாக பார்த்தது அக்காலம்!..
மாணவனை எந்திர ரோபோக்களாய் மாற்றியது இக்காலம்!...
திண்ணைப் பள்ளியில் பாடம் படித்தது அக்காலம்!...
படிப்பதற்கே மாணவன் திண்டாடுவது இக்காலம்!...
அப்பப்பா!!!!...
இந்த கல்வி முறை என்னவொரு கோலம்?...

ஜ.சுவேதா
இளங்கலை இரண்டாம் ஆண்டு கணிதவியல்
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக