கொரான காலம்
---------------------------------
வானம் பொழிந்து வளைக்கவில்லை
கடல் எழுந்து நிறைக்கவுமில்லை
பசி தின்று இறக்கவுமில்லை
பாவம் இந்த மனிதர்களை
பாவமே தின்கிறது
பார்க்கப் பார்க்கப் பாவமாகவும் இருக்கின்றது
கோடி கோடியாய் மரங்களை வெட்டி
கோடி கோடியாய் அஃறிணைகளை விரட்டி
கோடி கோடியாய்
கிருமி படைத்து
கோடி கோடியாய் அலைய விட்டான் தன் இனத்தை
அன்று மாடியில்
இன்று அழித்தலின் மிச்சம் நிற்கும் கிராமத்துக் கோடியில்
மனிதனை மனிதன் சாப்பிடும்
காலம்
கலி காலம் இதுதானோ?
முகக்கவசம் அணி
கைகளைக் கழுவாமல் சாப்பிடாதே இனி
சமூக இடைவெளி இல்லையேல் உன் குடும்பத்துக்கே சனி
கிளியொன்று பறத்தலின் வெளியில் பாடிச்சென்றதைக்கேட்டேன்
கேட்டவன் இருக்கின்றான்
விட்டவன் விரைகின்றான்
12 அடிக்குழி
சொந்தங்கள் பார்க்க இயலாத வெளி
கிட்ட வேண்டுமா வேண்டாம்
வேண்டாம்
வெந்ததைத் தின்று விதி வந்தால் போ
அதற்குள் இப்படி உலகை அலைய விட்டவர்களை களையெடு என்று அறிவுரை சொல்லிப்போனது
அணில் ஒன்று
கவிஞர் கி.அன்பு
உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II) சென்னை -114
9894577757
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக