ஆகஸ்ட் 23, 2020

தையலை உயர்வுசெய் - கவிதை

தையலை உயர்வுசெய்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?
என்ற காலம் போய்
உலகை ஆளப்பிறந்தவர்கள்
என அவையம் அனைத்தும் அறியச்செய்தவர்கள் பெண்கள்.
இன்று பெண்கள் பிறக்கும் போதே
விடியலைத்தேடும் விண்மீன்களாய் பிறக்கிறார்கள்
பெண்கள் நாட்டின் கண்கள்
அவர்கள் விதையிட்ட இடத்திலே
விருட்சமாகும் சக்தியுடையவர்கள்!
பெண்ணடிமை பேணிய
விஷவித்தகர்கள் வீழ்ந்தொழியட்டும்!
ஆடவரின் ஊனக்கண்களிலுள்ள துரும்பை அகற்றி
'ஆணுக்கு நிகர் பெண்களே' என்ற
மந்திரச்சொல் அறிவோம்!
புதிய மாதவி- அவள்
கண்களை பாடியது போதும்
கருத்தினை பாடுவோம்!
கூந்தலை பாடியது போதும்
கொள்கையை பாடுவோம்!
உடலை பாடியது போதும்
உரிமையை பாடுவோம்!
பெண்கள் வெறுமனே போதைப்பொருள் என்கிற
மனப் புண்களை அழிப்போம்!
தையலை உயர்வு செய்வோம்!!

 ரட்ஷியா குபேந்திரன்,
  பி.ஏ.ஆங்கிலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக