ஆகஸ்ட் 08, 2020

அரண் - புதுக்கவிதை



                       அரண்
                      """""""""""""""
தாய்மைதான்  அன்பிற்கு  அரணாகும்
  தாய்மொழியே  இனத்திற்கு  
        .                                            அரணாகும்;
ஆய்வுரைதான் அறிவிற்கு அரணாகும்;
  ஆண்மையே வீரத்தின் அரணாகும்;
தூய்மைதான் நலத்திற்கு அரணாகும்;
  தொன்மையே மரபுக்கு  அரணாகும்;
வாய்மைத்தான் வாழ்விற்கு 
                                                 அரணாகும்;
  வணக்கம்தான் பண்பிற்கு 
                                             அரணாகும்! (1).


பெண்மைத்தான் கற்பிற்கு அரணாகும்;
  பேரொளியே பகலிற்கு அரணாகும்;
தண்ணிலவே இரவிற்கு அரணாகும்;
  தளிர்மரமே நிழலுக்கு  அரணாகும்;
பண்ணிசைதான் பாவிற்கு அரணாகும்;
  பாவைக்கோ எழில்தானே அரணாகும்;
மண்வளமோ விளைச்சலுக்கு 
                                               அரணாகும்;
மனிதநேயம் உலகிற்கு அரணாகும்! (2).

கொடைவளமோ அருளிற்கு 
                                               அரணாகும்;
கொள்கைநெறி அரசிற்கு அரணாகும்;
படைவளமோ நாட்டிற்கு அரணாகும்;
 பகுத்தறிவு உறவிற்கு  அரணாகும்;
உடல்நலமோ உயிருக்கு அரணாகும்;
உடையழகோ மானத்தின் அரணாகும்;
சுடர்தமிழ்க்கு "ழ"கரமோ அரணாகும்;
உலகிற்கே  குறள்வழியே அரணாகும்!(3

                                     இப்படிக்கு
                           கெங்கை  பாலதா
                    சின்னகலையம்புத்தூர்.

முகவரி:-'-
                   கெங்கை  பாலதா
பெத்தன்யா ஜோதிட நிலையம்,
R.G.நகர்,
சின்னகலையம்புத்தூர் :-624 615.
பழனி(வழி).
அலைபேசி:  98940 71974.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக