அடையாளம் ? - புதுக்கவிதை.
தொலைத்தல்
தொலைதல்
அடையாளத்தை
நாம் விரும்பும்
மனத்திற்காக
நம்மை விரும்பும்
மனிதற்காக
சமூகத்துடன் ஒத்து போக
அல்லது
சிறந்த சமூக பிரஜ்ஜையாக
காட்டி கொள்ள
குடும்பத்திற்காக
குழந்தைக்காக
பிழைக்க வேண்டி
அல்லது
பிழைப்பு நடத்த
நல்ல மனம் என்ற போதைக்காக
கெட்டவன் என்கிற புதிய பாதைக்காக
உணவு வேண்டி
உடல் வேண்டி
அன்பு வேண்டி
கருணை வேண்டி
பணம் வேண்டி
குணம் தாண்டி
யாருக்காகவோ
எதற்காகவோ
எதன் பொருட்டோ
தொடர்ந்து
தொலைக்கின்றோம்
சுய அடையாளத்தை
எவர் எவரோ
கூறும் கருத்ததனை
சுமந்து திரிகிறோம்
அடையாளம்
தொலைத்து
அடையாளம் தேடும்
அபூர்வ உயிர் மனிதனே?
முனைவர் பா. சத்யா தேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக