முத்தமிட வா - புதுக்கவிதை
******************************************* முட்டையிலிருந்து பிறந்து
சிட்டென பறந்து
சிறுகிளையில் அமர்ந்த
என் சிறியவளே..
என் வீட்டு சன்னலில்
நான் பார்த்த அதிசயக் காட்சி
உனக்கு நீயே முத்தமிட்டது தான்
எத்தனையோ கட்டிட வல்லுநர்கள் முயற்சித்தும்,
உன்னைப் போன்ற அழகிய கூட்டினைக்
கட்ட முடியவில்லை
முயற்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்,
இன்றுவரை...
பயிரை வெட்டி
அழித்துண்ணும் பூச்சியை
விரட்டிப் பிடித்து வேட்டையாடினாய்
விவசாயியின் நண்பனாக
ஆனால்
உன்னை விரட்டியடிக்க
மனிதர்கள் வச்சிட்டாங்க
3g 4g டவர்
கம்பமாக...
கீச் கீச் கீச் கூ கூ கூ எனும் சத்தம்
கீதமாய்த் தோன்றியது
சிறிய வாலினை அசைக்கும் போது- என்னை
உன்பக்கம் பாரென சொல்வதைப்போல
தெரிந்தது...
உன் உடலசைவின் பாவனைகள்-என்
பார்வையைக் கவர்ந்தன
என் சிந்தையோ
உன்னுள் கலந்தன..
கவிபாட வார்தைகள் இல்லை-உன்
கருவிழியின் அழகைக் கூற"
பல்வேறு வண்ணங்களாக மேகங்கள் மாறின
உன்மேனி
மேலே எழும்பிப் பறந்ததாலோ என்னவோ?
நீ
மீண்டும்
என் வீட்டு ஜன்னலில்
முத்தமிடவருவாய் என்று
வரம் கேட்டுக்
காத்திருக்கிறேன்
வருத்தத்துடன்...
முகவரி:
க. சரத்குமார்
இளங்கலைத் தமிழிலக்கியம்
(மூன்றாம் ஆண்டு)
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
Pin code: 606204
Ph No: 8940399839
†**********************
வாசகர்கள் குழுவில் இணைய:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக