திருமாலிருஞ்சோலை வனப்புப்பத்து
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வனமதில் மனமது தொலைகிற அழகதே
வனமதில் நெடுமை வானுயர் அழகதே
வனமதில் வளரும் மந்தியும் அழகதே
வனமதில் மணக்கும் வாசனை அழகதே
வனமதில் வழியது நெளிவது அழகதே
வனமதில் இடைவரும் தலமரம் அழகதே
வனமதில் படரிய வளங்கொடி அழகதே
வனமதில் நடைவரும் சுனையது அழகதே
வனமதில் சிலம்பு ஆறு ஓடிடும்
அழகர் கோயில் அத்தனை அழகே.
மதுரை செல்லூர் உபாத்தியாயர்
முனைவர் ச.தமிழரசன்
அலைபேசி: 9025988791
*************
வாசகர் குழுவில் இணைய:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக