தெய்வம் யார் - புதுக்கவிதை.
மு.தினேஷ்கண்ணன்
2/257, சேணன்கோட்டை(அஞ்சல்)
வேடசந்தூர் வட்டம்
திண்டுக்கல்
dhineshkannanm@gmail.com
8608611272)
தெய்வம் யார் என்னைப் படைத்த வரோ?
தெய்வம் என்பவர் என்னைக் காப்பவரோ?
எனில் தெய்வம் எனநான் கருத
தாய் தந்தை அவர்களே போதுமே
தெய்வம் யார்? என்னோடு பேசி விளையாடி
என் பொழுதை மகிழ்ச்சி யாக்குபவரோ?
எனில் என் தம்பி தங்கையரே போதுமே
தெய்வம் யார்? என்னுடைய இன்ப
துன்பங்களில் பங்கு கொள்ளு பவரோ?
எனில் என் துணையே போதுமே
தெய்வம் யார்? நான் கொஞ்சி விளையாடவும்
என்னை வழி அனுப்பவும் இருப்பவரோ?
எனில் என் குழந்தைகளே போதுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக