தமிழ்த்தவம்
பி.சார்லஸ்
2ஏ, அனுப்பானடி வாய்க்கால் வீதி,
பழைய குயவர் பாளையம் முதன்மைச் சாலை,
மதுரை-09
மின்னஞ்சல்: charles036@gmail.com
தொடர்புக்கு: 8870334856
கூடல் தவிர்த்து குறுநகை தவிர்த்து
கூழும் தவிர்த்து குடியும் தவிர்த்து
காதலும் தவிர்த்தேனே காலனுக்கஞ்சி யில்லை
ஏகம் துணிந்தே இமை சோர
கொடும் பருவத முகட்டி லமர்ந்தே
எண்குணத்தானே! நின்னடி பள்ளி
கொண்டேன்
இனி ஆழிவித்தும் வேண்டா அணியும் வேண்டா
பாவைக்கூத்தும் வேண்டா பதுமையும்வேண்டா
பரமனே! நின்வரம் வேண்டி நின்றேன்
வரத்திலே நான் அறனும் வேண்டேன்
ஆநிரையும் வேண்டேன் அமுதசுரபியும் வேண்டேன்
ஆதிரையானே! அடியேன் யாசிப்பதெல்லாம்
தவம் புரிந்த தவமாம் தமிழ் மொழி
தன்னிகரில்லாத் தனி நிலையில் சிறக்க
நின் பேறினை வேண்டி தவம் புரிந்தேன்
வரமளிப்பாய் வள்ளலே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக