பிப்ரவரி 18, 2020

பேருந்தலோ வாழ்க்கை - புதுக்கவிதை.

பேருந்தலோ வாழ்க்கை - புதுக்கவிதை.

அ.எபநேசர் அருள் ராஜன்
ஏதேன் வீதி
புளியங்குடி
தென்காசி மாவட்டம்
தொடர்புக்கு: 9597674922
ebenezerarulrajan@gmail.com

தினமும் பேருந்து ஒன்றை 
வியர்த்தலின் பின்புலத்தில் 
ஓடி
பிடிதலறியா ஊசலாய் பற்றி

சக்கர ஊர்தலின் சாதுர்யமறியாமல்

இயக்க இயங்குதலின் 
சூத்திரம் தெரியாமல்

விதி மதிகளின்
விசை புரியாமல்

ஏறும் இறங்கும் 
படி பாராமல்

அவசரங்களை உடுத்தி
அழுத்தங்களைத் தூக்கி
இறுக்கங்களைக் கட்டி

சென்று மீளுமெனக்கு

வாழ்க்கைப் பேருந்தின்
சூட்சுமம் தெரியுமோ...
என்னவோ எண்ணமோ - புதுக்கவிதை.

மறதித்தண்ணீரைக் குடித்து
எண்ணத்தூக்க மாத்திரை விழுங்கியும் 
உறக்கக்கண்கள்
துயில் கொள்ளாமல் சிறையிருக்கின்றன
குப்பையில் வீசிய
என் பால்ய வயது 
பாய் தலையணையிலேயே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக