"விவசாயம்"
கவிஞர் ஞானா (எ)
ஞானமூர்த்தி
ஆதி மனிதன்
முழுதாய் மலர
ஆற்றங்கரையே
போதிமரமாய்
வந்தது !
ஆயுள் வளர்க்கும்
பயிரை விளைக்கும்
கலையைக் கற்றுத்
தந்தது !
கலைக்குப் பெயர்
விவசாயம் !
கற்றுகொண்டவன்
விவசாயி !
உயிரை வளர்க்க
பயிரை வளர்த்தான் !
பயிரை வளர்த்து
வயிறை வளர்த்தான் !
மேட்டுக்குடி விவசாயி!
முழுநேர முதலாளி !
மும்மாரி பொழிந்தது !
முப்போகம் விளைந்தது!
ஊர் சொத்து
தலக்கட்டு
எல்லாமே விவசாயி !
விவசாயின்னா கர்வம்!
விவசாயம்தான் சர்வம்!
அன்று .......
பணக்காரக் கம்பனி
படையெடுத்து வந்தது !
கார்ப்பரேட் கம்பனி
கடை தொறந்து விட்டது!
பீட்சாவும் பர்கரும்
உணவாகிப் போச்சு !
பீஸ் கட்ட முடியாம
விவசாயி புள்ள கல்வி
கனவாகிப் போச்சு !
விளைஞ்சி நின்ன
கதிரெல்லாம்
விலையில்லாம போச்சு!
கந்துவட்டி இப்போது
பத்து இருபது ஆச்சு!
குடிக்கக் கூட
கூழு இல்ல
கோவணத்தக் காணோம்!
சோறு போட்ட
விவசாயி
கூறுகெட்டுப் போனோம்!
குடிகாரனுக்குக் கூட
பொண்ணு தரும் ஊரு!
இந்த குடியானவனுக்குத்
தருவதில்ல பாரு !
விவசாயின்னா பாவம்!
விவசாயம்தான் சாபம்!
இன்று ......
கவிஞர் ஞானா (எ)
ஞானமூர்த்தி
47 முருகா ரெட்டி தெரு
சோளிங்கர் - 631102
இராணிப்பேட்டை மாவட்டம்
9444443249
gnanamoorthy974@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக