பூச்சூடிய நிலவு - புதுக்கவிதை
சி.முத்துநாச்சி@தர்ஷனா,
இளங்கலைத் தமிழ்
தியாகராசர் கல்லூரி,
மதுரை.
kuttydhars@gmail.com
பூச்சூடிய நிலவு
நிலவே நீ பூ சூடி வந்தாய்
கண்டேன் நிலவின் ஒளி கண்களை
ஆற்றின் புவியில் சிக்கிய பெண்ணே
உன் விழியில் சிக்க வைத்தாய்
காற்று தீண்டிய உன்னை
எந்தன் காதல் தீண்டியதோ
தண்ணீர் கொடுத்த உன்னை
கண்ணீர் துடைக்க விடமாட்டேன்
குயிலே துயில் உரங்கு எந்தன்
மனமோ மயில் ஆகட்டும்
நெஞ்சில் நிறைந்த உன்னை
நினைவெல்லாம் வைத்துக் கொள்வேன்
மாலை நேரம் வருகிறேன்
மாலை சூட்டி விடுகிறேன்.
kuttydhars@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக