ஜனவரி 05, 2020

ஏந்திழை - புதுக்கவிதை கவிஞர் அருணாச்சலம்

ஏந்திழை - புதுக்கவிதை
கவிஞர் அருணாச்சலம்

Dr.  N. Arunachalam 
590.பாலாஜி கார்டன் 
அரியக்குடி 630202
காரைக்குடி 
சிவகங்கை மாவட்டம் 

9442608575

(ஏந்திழை =அணிகலன் )

சாயத்தின் 
நிஜம் 
தெரிய வாய்ப்பில்லை.

பிம்பதில் 
அழகாய் 
காட்டிக் கொள்கிறேன்.

கண்ணாடிகளில் 
பொய் 
இல்லை.

கலவைகள் 
வெவ்வேறு ஆனாலும் 
நிறங்களை மாற்ற முடியவில்லை. 

பாத்திரங்களுக்கு 
ஏற்றக் 
கதை எழுதி கொண்டிருக்கிறேன்.

மேடைகளில் 
நிழலின் 
கூத்து .

ஒப்பனை இல்லாமல் 
நான்...
எனக்கே என்னைத் தெரியவில்லை.

நீங்களும் 
அப்படியே வாருங்கள் 
சாயம் ஒட்டாமல் 
அணைத்துக்கொள்வோம்! 

#வழிப்போக்கன்அருணா 

#ArunachalamNarayana

Dr.  N. Arunachalam 
590.பாலாஜி கார்டன் 
அரியக்குடி 630202
காரைக்குடி 
சிவகங்கை மாவட்டம் 

9442608575

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக